2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

இந்திய வீட்டுத்திட்டம் முதல் கட்டமாக பூண்டுலோயா, டன்சினன் தோட்ட தொழிற்சாலைப் பிரிவு இலக்கம் 7இல் நேற்று(24) ஆரம்பிக்கப்பட்டது.
    
இந்திய உதவியுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 4,000 வீடுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் அண்மையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைவாக காந்திப்புரம் என்ற பெயரில் 1,134 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.ஏ.சின்ஹா, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரம், தேசிய கலந்துரையாடல் மற்றும் அரசமொழி அமைச்சரான மனோ கணேசன், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .