2025 ஜூலை 31, வியாழக்கிழமை

“எழுக தமிழ்” கிழக்கில் ஆரம்பம்...

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா

வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி, இன்று மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்;டு கோபுரம் அருகிலிருந்து ஆரம்பமாகியது.

இப் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

இரா.துரைரெத்தினம், தமிழ் மக்கள் ரேவையின் இணைத்தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா உட்பட பல முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு இணைப்பு, பொதுமக்களின்  பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்தல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்று நாவற்குடா விபுலானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .