2025 மே 29, வியாழக்கிழமை

யாழில் சர்வதேச யோகா தினம்

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று சனிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது, பாதுகாப்பு கண்ணாடியால் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்து யோகா பயிற்சியை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பார்வையிட்டார்.

இந்நிகழ்வை, இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் செய்மதி மூலம் யோகா பயிற்சியினை பார்வையிட்டனர்.

இதில், இந்திய தூதுவர் வை.கே.சிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ரட்ணாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன, வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X