ஆ.ரமேஸ் / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மலையகத்தின் மூத்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் 106ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்டம் எம்.பியுமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில், கொழும்பு காலிமுகத்திடலிலுள்ள பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இ.தொ.காவின் தலைமையகமான கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள சௌமியபவனில் விசேடப் பூஜைகள் இடம்பெற்றன.
இதன்போது, உலக ஆணழகன் போட்டியில் இலங்கைக்கு வெங்களப் பதக்கத்தை பெற்றுகொடுத்த எம்.ராஜ்குமாருக்கு, டுபாய் நாட்டுக்கு செல்ல இரண்டாவது முறையாக, 3 இலட்சம் ரூபாய் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கையளிக்கப்பட்டமையும், நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.













41 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago