Freelancer / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வாக, வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று, 200ஆவது ஆண்டு பொறிக்கப்பட்ட கேக்கையும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் மடடடடைடடடட வெட்டி வைக்கப்பட்டதுடன் கல்லூரியின் அதிபரால் யாழ்ப்பாணக் கல்லூரிக்கான வலைத்தளமும் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்லூரியின் பிக்னல் ஞாபகார்த்த மைதானத்தில் கல்லூரியின் 200ஆவது ஆண்டுக்கான விசேட சின்னம், கல்லூரியின் அதிபர் ருசிரா குலசிங்கம், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வண. பத்ம தயாளனால் திரைநீக்கம் செய்யப்பட்டது.
சமநேரத்தில், கல்லூரியின் வர்ணம் தாங்கிய பலூன்களும் ஆகாயத்தில் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து, 200 ஆவது ஆண்டுக்கான ஜேர்சி, சொக்ஸ், நாட்காட்டி என்பன அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 200 மரக்கன்றுகள் நடும் செயற்றிட்டடமும் முன்னெடுக்கப்பட்டது.
நிதர்சன் வினோத்






24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago