2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தல்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பைச் சேர்ந்த மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி டி.சிவராமின் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (29) மாலை நடைபெற்றது.

அருள்.சஞ்ஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீரகேசரிப் பத்திரிகையின் வி.தேவராஜ், மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன், உட்பட பலர் நினைவுரைகளை ஆற்றினர்.  

மேலும், இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், இ.பிரசன்னா, இராஜேஸ்வரன் உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்: வடிவேல் சக்திவேல்,எம்.எஸ்.எம். நூர்தீன்,வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X