2024 மே 20, திங்கட்கிழமை

3வது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட்

'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில்  நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக அடக்கு முறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று புதன்கிழமை (4)  மன்னார் மாவட்ட இளைஞர்கள் மற்றும்  சிவில் சமூக அமைப்பினர் இணைந்து கருப்பு கொடிகளை ஏந்தியவாறு முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் இன்று  காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,சட்டத்தரணி செல்வராசா டினேசன்,உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள்,உறுப்பினர்கள்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன்பிகிராடோ,பணியாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X