R.Tharaniya / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்துக்கு முன்பாக பொறியியல் பிரிவு தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை புதன்கிழமை ( 17) முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை மின்சார சபையை, 4 துண்டுகளாக உடைத்து தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மின்சார சபையின் ஒப்பந்தத்தை, இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர்கள் சபை மறைத்து வைத்துள்ளது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்..
  மின்சார சபையை தனியார்மயப்படுத்தப்படுவதால் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டு வருடத்திற்கு பிறகு பல துண்டுகளாக சபையை பிர்த்து தனியார்   மயமாக்கல் அரசாக்கத்தால்முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.





1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago