Janu / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி தனது 70 வது பவள விழாவை முன்னிட்டு நடத்திய வீதி நடைபவனி (Road Parade) திங்கட்கிழமை (06) அன்று கோலாகலமாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் உச்சகட்டமாக, கல்லூரியின் விசேட கொடியை ஏந்திய வண்ணம் ஹெலிகாப்டர் ஒன்று சாகசப் பறப்பை மேற்கொண்டது.
வானில் கம்பீரமாகக் கல்லூரிக் கொடி பறந்த இந்தத் திகைப்பூட்டும் சாகசம், நடைபவனியில் கலந்துகொண்டோரிடமும், பார்வையாளர்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபவனி கல்லூரி அதிபர் நா. புவனேஸ்வராஜா தலைமையில் நடைபெற்றது
பிரதம விருந்தினராக கல்லூரியின் ஸ்தாபக குடும்பத்தைச் சேர்ந்த திருமதி. யோகேஸ்வரி ஜெயம் விஜயரட்ணம் அம்மா அவர்களும், விசேட விருந்தினராக பழைய மாணவர் மன்றத்தின் காப்பாளர் திரு. பாரத்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் பழைய மாணவர்கள், பெற்றோர், தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வர்ணமிகு ஆடை அலங்காரங்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரிப் பெருமைகளைச் சித்தரிக்கும் அலங்கார ஊர்திகளுடன் நடைபெற்ற இந்த நடைபவனி, கல்லூரியின் சமூகப் பிணைப்பையும் ஒற்றுமையையும் பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியது.








40 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago