Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மூதூரில் இருந்த பிரான்ஸ் நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷன்பாம் (ACF) நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேரை கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அப் படுகொலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (04) அன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண புதிய பேருந்து நிலையம் முன்பு இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago