Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கொழும்பு மாநகர சபையினால் (CMC) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு, மாநகர சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மத நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த இப்தார் சந்திப்பில், கொழும்பு மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்களின் ஒன்றியம் (CMC Muslim Member Forum) மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு மதத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நன்றி: எம்.நஷார்





1 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago