Editorial / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான 'INS GHARIAL' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை புதன்கிழமை (04) அன்று வந்தடைந்தது.
கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இலங்கை வந்தடைந்துள்ள 'INS GHARIAL' என்ற போர்கப்பல் 124.8 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER, GAURAV TEWARI கடமையாற்றுகின்றார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் (Baily Bridges), டிட்வா புயலின் சீரற்ற காலநிலையின் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்கள் சரிசெய்யப்படும் வரை தற்காலிக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக பேரிடர் மேலாண்மை மையத்திடம் மேற்படி தற்காலிக பாலங்கள் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர். மேலும், இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




25 minute ago
9 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
9 hours ago
06 Feb 2026