Mayu / 2023 நவம்பர் 29 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்று யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தின் முன்பாக இருந்து வாகன பேரணியில் சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
யாழ் சிறைச்சாலையில் வைத்து அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.
1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 800m ஓட்டபோட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.
72 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினோத்


22 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
07 May 2026