Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 14 பேரின் உருவப்படத்துக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (05) அஞ்சலி செலுத்தப்பட்டது.
களுவாஞ்சிகுடியில் 1987ஆம் ஆண்டு வீதி ரோந்துக்குச் சென்ற இந்திய இராவணுவ சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் புதல்வரான சக்கரவர்த்தி உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
30 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக இந்த நினைவுகூரல் நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago