2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டல்…

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 11:58 - 1     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - பறண்நட்டகல் பகுதியில் கண் வைத்தியசாலையொன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04), இந்தியாவின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா, பிரதேசசெயலர் கா.உதயராஜா, முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதி பொலிஸ்மா அதிபர் அபயரட்ண, கிராமமக்கள், பொது அமைப்பினர் எனப் பலர் கலந்துகொண்டனர். படங்கள் :க. அகரன்


You May Also Like

  Comments - 1

  • SK KIRUBARATHAN Friday, 06 September 2019 08:38 AM

    அனைவருக்கும் வணக்கம், இந்த செய்தியை பார்த்ததும் எனது மனதில் எழுந்த விடயத்தை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. திரு பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை நான் எப்போதும் விரும்பி கேட்டு ரசிப்பவன். One of my favorite singer...I respect his achievements. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒரு கண் ஆஸ்பத்திரி ஆரம்பித்தலுக்கான கட்டட வேலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இவரின் பங்கு என்ன என்று விளங்கவில்லை. அவர் ஒரு பாடகர். அவருக்கும் கண் ஆஸ்பத்திரிக்கும் என்ன சம்பந்தம்...? அது மட்டுமல்ல, இலங்கையில் வவுனியாவில் வேறு ஒரு பிரமுகர்களோ அல்லது சமூக சேவையாளர்களோ இல்லையா....? இதுக்கு என்று திரு பாலசுப்ரமணியத்தை இழுத்துக்கொண்டு வரவேண்டுமா? இலங்கையில் எத்தனையோ நல்லவர்கள்....கொடையாளிகள்....சமூக ஆர்வலர்கள்... இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஏன் இந்த தேவையற்ற ஆடம்பரங்கள்... ? எல்லாவற்றுக்கும் இந்தியத் தமிழ் சினிமா பிரமுகர்களா இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்தார்கள்....? மிக மனவருத்தமாக இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .