2025 ஜூலை 23, புதன்கிழமை

அனுநாயக்க தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

Editorial   / 2025 ஜூலை 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி  தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் புனித பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரி மகா விஹாரையின் அதி வணக்கத்திற்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா நாயக்க தேரரின் நினைவு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, செவ்வாய்க்கிழமை (22) இரவு புனித பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அஸ்கிரி விகாரை தரப்பு மகா சங்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரிய தரப்பின் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகா நாயக்கதேரரை சந்தித்து அவருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .