2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு…

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட, 2018ஆம் ஆண்டில் புதிய வகுப்புக்களுக்குச் செல்லவுள்ள, வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று (23)  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் தலைமையில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிசாந்தினி வசந்தகுமார் ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களும், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு, சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது  (படப்பிடிப்பு - நடராஜன் ஹரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X