2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அறுவடை…

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேண்தகு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட நஞ்சற்ற மரக்கறிகளின் அறுவடை விழா, திருகோணமலை, கிண்ணியா அல்-ஆமீன் வித்தியாலயத்தில் இன்று  (16) இடம்பெற்றது.

அதிபர் ஏ.எம்.வாஹீட் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராக குறிஞ்சாக் கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர்  யூ.எல்.எம். கபூர்,  பேண்தகு அபிவிருத்தி  இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான எம்.எம். இபாத்துல்லாஹ் உட்பட அண்மித்த பாடசாலை அதிபர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியும், சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன.

(படப்பிடிப்பு: ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X