2025 மே 29, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Sudharshini   / 2016 ஜூன் 16 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், பாலித ஆரியவன்ச

14 அம்சக் கோரிக்களையும் ஏற்று அரசாங்கம், உரிய தீர்வை வழங்க முன்வரவேண்டுமென தபால் திணைக்கள ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க  போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்றும் (16) நடைபெற்றது.

இதற்கமைவாக, ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தபாலக ஊழியர்கள் இன்று(16) பகல் 12 மணியளவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

புதிய நியமனங்கள் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 12ஆம் திகதி நள்ளிரவிலிருந்து தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, தபால் திணைக்களத்தில் பல சேவைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X