2025 மே 15, வியாழக்கிழமை

ஆரையம்பதி ஆஸ்பத்திரிக்கு…

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான உயிர்காக்கும் கருவி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மீள்சக்தி வழங்கக்கூடிய இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட இந்த உயிர்காக்கும் கருவியை( recharging portable ventilator ) அவுஸ்திரேலியன் மருத்துவ உதவி மன்றம்( AUSTRALIAN MEDICAL AID  FOUNDATION) அன்பளிப்பாக வழங்கியது.

இவ் வைபவம் ,நேற்று (13) ஆரையம்பதி வைத்தியசாலையில் நடைபெற்றது.

வைத்தியசாலைபொறுப்பதிகாரியும், மாவட்ட வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி டாக்டர் திருநாவுக்கரசு கௌரிசங்கரன் அக்கருவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.கூடவே வைத்திய அதிகாரி டாக்டர் அழகையா இளங்குமரனும் வைத்தியசாலை நிருவாகத்தினரும் கலந்துகொண்டனர்.

கொழும்பிலிருந்து இக்கருவியைக் கொணர்ந்த சுகாதார தொழினுட்ப குழுவினர்,இதனை செய்முறை விளக்கத்தையும் அளித்து
 மாவட்டவைத்திய அதிகாரியிடம் கையளித்தனர்.
மிக அவசரமாக செயற்கைச்சுவாசம் தேவைப்படும் நோயாளியை நோயாளர்காவு வண்டியில் கொண்டு செல்வதற்கு மிகவும் பொருத்தமான ஒருகருவி இது.

நீண்டநாள் தேவையாகவிருந்து வந்த இக்கருவியை தமது வைத்தியசாலைக்கு வழங்கி உதவுமாறு மாவட்டவைத்திய அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு கௌரிசங்கரன் குறித்த அமைப்பிடம் கோரிக்கை விடுத்து வந்திருந்தார்
 என்பது குறிப்பிடத்தக்கது.
( படங்களும் தகவலும் வி.ரி.சகாதேவராஜா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .