Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 11 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து, பிரதேச மக்கள், இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரியும் காட்டு யானைகள் கிராமத்துக்குள் வருவதைத் தடுப்பதற்காக வேலி அமைக்க வேண்டுமனெ வலியுறுத்தியுமே, பிரதேச மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் (வயது 34) என்பவர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, நேற்று (10) மாலை உயிரிழந்துள்ளார்.
இவர், மாடுகளை மேய்த்து விட்டு, பின்னர் வாகனேரி குளத்தில் குளிப்பதற்காக சென்ற போது, குளத்துக்கு வந்த யானையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனேரி குளத்துக்கு அருகில் காணப்பட்ட சடலத்துக்கு முன்பாக, பொதுமக்கள் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானைகளின் தொல்லையில் இருந்து தம்மை பாதுகாக்கும் முகமாக, உடனடியாக வேலி அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் இதன்போது வலியுறுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .