2025 ஜூலை 23, புதன்கிழமை

இ.தொ.காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...

Kogilavani   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிராகவும் அமைச்சர் திகாம்பரத்தின் உருவ பொம்மையை எரித்தமைக்குக் கண்டனம் தெரிவித்தும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள், தலவாக்கலை நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக  ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

தலவாக்கலை பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில்,  அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் அமைச்சர் திகாம்பரத்தின் பிரத்தியோக செலாளருமான நகுலேஸ்வரன்,  தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவர் சிவனேசன் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

ஹட்டன் தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தின் பெயர்ப் பலகையில், அமரர்  சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மாற்றியமையைக் கண்டித்து, இ.தொ.காவின் ஆதரவாளர்கள், ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அமைச்சர் ப.திகாம்பரத்தின் கொடும்பாவியையும் எரித்தனர்.

இதனைக் கண்டித்தே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள், இன்று தலவாக்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .