Editorial / 2023 மே 02 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்சன பத்திரணவின் அழைப்பின்பேரில் இந்திய விமானப்படையின் படைப்பிரதானி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி PVSM, AVSM, VM, ADC இலங்கைக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 மே முதலாம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கையை வந்தடைந்த அவரை இலங்கை விமானப்படையின் படைப்பிரதானி ஏர் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச மற்றும் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின்போது ஏர் சீப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளதுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் கட்டளைத் தளபதிகளையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago