2025 மே 29, வியாழக்கிழமை

இரதோற்சவம்...

Gavitha   / 2016 ஜூன் 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்

வரலாற்று சிறப்பு மிக்க சிலாபம் மானாவரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமி ஆலய இரதோற்சவம் இன்று சனிக்கிழமை (18) நடைபெற்றது.

இராவணன் சீதையை லங்காபுரிக்கு கவர்ந்து கொண்டு சென்ற பின்னர், சீதையை மீட்பதற்காக ஸ்ரீ ராமருக்கும் இராவணனுக்கும் இடம்பெற்ற சம்ஹாரத்தின் போது,  இராவணனால் பிரம்மஹஷ்தி தோஷம் ஏவப்பட்டது. அந்த பிரம்மஹஷ்தி தோஷம் நீங்குவதற்கு ஸ்ரீ இராம பிரான் மணலை வாரிப் பிடித்து பூஜை செய்து வணங்கப்பட்ட லிங்கம் ஸ்ரீ இராமலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது. இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

இந்த லிங்கமத்தில் ஒன்று இந்தியாவில் இராமேஸ்வரத்திலும் மற்றையது இலங்கையிலுள்ள மானாவரியிலும் உள்ளது என்று கூறப்படுகின்றது.

நாளை 12 மணிக்கு இவ்வாலயத்தில் தீர்த்தோற்சவம், அருகிலுள்ள தீர்த்தக்கரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0

  • K.m.Soundhararajan Sunday, 19 June 2016 05:51 AM

    "அனைவருக்கும் அருள் கிடைக்கவேண்டும். அனைவரும் அமைதியாய் வளமாய் வாழவேண்டும்" இதுவே எது பிரார்த்தனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X