Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் தலைமையில், இரத்ததானம் முகாம், பொலிஸ் நிலைய வளாகத்தில், இன்று(5) இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பிரதி பொஸி மா அதிபர் ஆஷா கருணாரத்ன, அம்பாறை மாவட்ட பொலிஸ் அதிகாரி ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க விஜயசுந்தர ஆகியோரின் நெறிப்படுத்தலில், இந்நிகழ்வு இடம்பெற்றது.
சமூக பொலிஸ் பிரிவு, மதத் தலைவர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் இணைந்து, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, குருதி கொடையை வழங்கி வைத்தனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பு வைத்திய அதிகாரி என்.ரமேஷ் தலைமையிலான வைத்தியர், தாதியர், நாவிதன்வெளி பொதுசுகாதார பரிசோதகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .