2025 மே 07, புதன்கிழமை

இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி

Freelancer   / 2023 மே 14 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புதிய பிராந்திய அலுவலகம் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்றைய தினம் (14-05-2023) பதுளை ரேஸ்கோர்ஸ் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இரத்தினக்கற்கள் அதிகம் உள்ள ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இரத்தினக்கல் தொழில் பற்றி அறிந்து கொள்வதற்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த நிறுவனத்தின் ஊடாக வாய்ப்பு  கிடைப்பதுடன், டிப்ளோமா உள்ளிட்ட பல பாடநெறிகளும் இங்கு நடத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X