Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 19 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் இறுதிக் கிரியைகள், இந்தியா, சிவகங்கை, திருப்பந்தூர், அம்பத்தூர் கிராமத்தில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றன.
சுகயீனம் காரணமாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த திருமதி ராஜேஸ்வரி அம்மாள், கடந்த 16ஆம் திகதி மாலை 4 மணியளவில் காலமானார்.
இந்த இறுதிக் கிரியைகளில் இந்தியா, தமிழ் நாட்டின் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கையிலிருந்து காங்கிரஸின் உயர் மட்டக் குழுவினர் உட்பட மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கலந்துகொண்டார்.
(படங்கள்: எஸ்.கணேசன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .