2025 மே 15, வியாழக்கிழமை

உதவிய கரங்கள்…

Editorial   / 2021 ஜூலை 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவில் தெரிவுச் செய்யப்பட்ட வயோதிப தாய்மார் மற்றும் விசேட தேவையுடையோர் இருக்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொதிகளும், உடைகளும்  வழங்கி வைக்கப்பட்டன.

சுயசக்தி நிறுவனத்தின்   ஏற்பாட்டில் மொஹான் ஜீ நிறுவனத்தின்  அனுசரணையில்  இவை வழங்கிவைக்கப்பட்டன.

நுவரெலியா ,அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட பகுதிகளில் தெரிவுச் செய்யப்பட்ட விசேட தேவையுடையோர்  இருக்கும் 50    குடும்பங்களுக்கும், 300 வயோதிப தாய்மார்களுக்குமே இவ்வாறு உதவி செய்யப்பட்டது

சுயசக்தி நிறுவனத்தின்  திட்டப் பணிப்பாளர் எஸ். செல்வராஜ் தலைமையில் இத்திட்டம் பிரதேச  சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. (படங்களும் தகவலும்: எம்.கிருஸ்ணா)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .