Janu / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு என்பது கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான ஒரு மத விழாவாகும். சிலுவையில் அறையப்பட்டு மரணித்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்ததை இது குறிக்கிறது.
தீமை மற்றும் மரணத்தின் மீது இயேசு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நாளாக இது கருதப்படுகிறது. இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய நிகழ்வாகும். சாம்பல் புதனுடன் தொடங்கும் 40 நாட்கள் கொண்ட 'தவக்காலம்' இந்த உயிர்த்த ஞாயிறுடன் நிறைவடைகிறது.
இயேசுவின் கடைசி இராப்போசனம் (பெரிய வியாழன்), சிலுவைப் பாடுகள் (பெரிய வெள்ளி) ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதிகாலை ஆராதனைகள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் மற்றும் சிறப்புத் திருப்பலிகள் தேவாலயங்களில் நடைபெறும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில், 2019-ஆம் ஆண்டு இதே போன்றதொரு தினத்தில் நடந்த துயரமான தாக்குதல்கள் காரணமாக, இந்த நாள் ஆழ்ந்த அஞ்சலிக்கும் நினைவுகூரலுக்குரிய நாளாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல இடங்களிலும் உள்ள தேவாலயங்களில், ஞாயிற்றுக்கிழமை (04) அன்று விசேட ஆராதனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன..
06) தமிழ்மிரர் நிருபர்கள்
அந்த வகையில், சனிக்கிழமை (04) இரவு நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க மக்கள் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு வழிபாடுகளில் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலிகள் இடம்பெற்றதுடன், தேவாலயங்களை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் சனிக்கிழமை (04) இரவு 11.15 மணிக்கு ஆரம்பமானது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், இந்த திருவிழா திருப்பலி கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது, பேராலயத்தை சூழ பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மன்னாரில் எஸ்.ஆர்.லெம்பேட்





























மட்டக்களப்பில்... வ.சக்தி








ஹட்டனில் ... சுதத் எச்.எம் ஹேவா






யாழ்ப்பாணத்தில்.... செல்வநாயகம் கபிலன்




கொழும்பில்... - குஷான் பதிராஜ









5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago