2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலக சமாதான தினம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் நினைவுஅறக்கட்டளையின்  அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களின் சமாதான தொடர்பான பயிற்சி யூட்டப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு நடைபவனி திட்டமிடப்பட்டது.  

குறித்த நடைப்பயணம் ஆனது உலக சமாதான தினத்தை முன்னிட்டு  ஞாயிற்றுக்கிழமை (21) அன்று 9  மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து அமைதி வழியாக நடப்பயணம் ஆனது ஆரம்பமாகி கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர்களால் பல்வேறு பட்ட அதாவது சமாதானம் எண்ணக்கரு தாங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் நடை பயணம் மேற்கொள்ளபட்டது.  

இவ் நடைப்பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மதகுருமார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லை நாதன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X