Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2021 ஜூன் 16 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கொரோனா அலை பெருந்தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப்பொதி வழங்கும் செயற்றிட்டம், கல்முனையன்ஸ் போரத்தினால் கடந்த இரு நாள்களாக (14,15) முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா ப்ரதர்ஸ் பிஸ்னஸ் போரத்தினால் கல்முனையன்ஸ் போரத்திற்கு கிடைக்கப்பெற்ற ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான உதவியிலிருந்து அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பால்மா, ரவை, மெக்ரோணி, தேயிலை தூள் போன்ற உணவுப்பொருட்கள் அடங்கிய 200 உலருணவுப்பொதிகளும் கல்முனை, இஸ்லாமபாத் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்கள் இனங்காணப்பட்டு வழங்கப்பட்டன.
இதில் பள்ளிவாசல்களில் கடமை புரியும் தெரிவுசெய்யப்பட்ட மெளலவி, முஅத்தீன்மார்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025