2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

என்போல்ட் ​தோட்டத்தில் ​அஞ்சலி

Editorial   / 2021 ஜூலை 26 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை டயகமவைந் ​சேர்ந்த மறைந்த ஹிஷாலியின் மரணத்துக்கு நீதி கோரி, லிந்துலை என்போல்ட் தோட்டத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் இன்று (26) இடம்பெற்றது.

சிறுமி ஹிஷாலினி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற நிலையில் உயிரிழந்தார்.

“சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணை வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என மலையகம் உள்ளிட்ட நாடளவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 என்போல்ட் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துலை-என்போல்ட் பிரதேச அமைப்பாளர் ரமேஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

 சிறுமி ஹிஷிலினியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவருடைய   உருவப்படத்துக்கு முன்பாக ​தோட்ட மக்களால், மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்களும் தகவலும் எம்.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .