Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் நேற்றுக் காலை (30) ஆரம்பமான கட்டார் - இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய (31) அமர்வில், இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.
இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின் ஜாஷிம் பின் முஹம்மட் அல் தானிக்குமிடையில் இந்த முக்கியத்துவம்வாய்ந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.
சுற்றுலா பயணத்துறை, சமையல் எரிவாயு, விமானப்போக்குவரத்து உள்ளடங்கிய இன்னோரன்ன துறைகளில், பரஸ்பர நாடுகளின் மேம்பாடு தொடர்பிலேயே, ஒப்பந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்றைய அமர்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கட்டார் நாட்டின் வர்த்தக அமைச்சரும் சிறப்புரையாற்றினர்.
இரண்டு நாடுகளதும் நீண்டகால உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து இருவரும் தமது உரையில் பேசினர்.
கைத்தொழில் மற்றும் வரத்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களம், சர்வதேச மூலோபாய அமைச்சின் கீழான ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுங்கத்திணைக்களம், வெளிவிகாரத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த உயரதிகாரிகளும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்றுக் காலை ஆரம்பமான கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் இரண்டு நாள் அமர்வுகள், இன்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம (29) கொழும்பு வந்திருந்த கட்டார் வர்த்தக அமைச்சர் தலைமையிலான 20 பேர் அடங்கிய உயர்மட்ட வர்த்தகத் தூதுக்குழுவினர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.
29 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
59 minute ago
2 hours ago