2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கர்ப்பிணி கொலை: நீதி கோரி போராட்டம்...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில், 7 மாதக் கர்ப்பிணியொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்,  நீதியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மகளிர் அமைப்பொன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று,  ஊர்காவற்றுறை பொதுச்சந்தைக்கு முன்பாக, இன்று  காலை இடம்பெற்றது.

மேற்படி பகுதியில், ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர், கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதியன்று, கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவருடைய கொலை தொடர்பில், மண்டைதீவு பகுதியில்  முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், அதே தினத்தில் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தினால், இன்று (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .