2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Janu   / 2024 மார்ச் 04 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை  (04) இடம்பெற்றுள்ளது . சங்கத்தின் முன்னாள் உறுப்பினரான, புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் சி.முகுந்தன் என்பவர் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது . 

சமூகத்தின் மீதான அக்கறை என்ற 7வது கூட்டுறவு கொள்கைக்கு அமைவாக இந்த உதவித்திட்டம் வழங்கும் செயற்றிட்டமானது கடந்த 27.01.2022 அன்று தலைவர் ப.கேசவதாசனால்  ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வருடா வருடம் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின தலைவர் கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் பொது முகாமையாளர்  கோ.கிருஷ்ணவேணி, சங்கத்தின் உப தலைவர் செ.குமாரசிங்கம், சங்கானை பிரதேச செயலர்  உ.கவிதா, சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சி.பரமானந்தராசா, கா.பார்த்தீபன், முன்னாள் பணியாளரும் நிதி வழங்குனருமான சி.முகுந்தன், சங்கத்தின் பணியாளர்கள்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர் . 

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .