2025 மே 19, திங்கட்கிழமை

களுத்துறையில் வீடுகள் கையளிப்பு

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின்  நிதிஒதுக்கீட்டின் கீழ், களுத்துறை மாவட்டத்தின் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள், மக்களின் பாவனைக்காக, இன்று (1) கையளிக்கப்பட்டன.

மேலும்  10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொங்கீரிட் பாதையும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை, பெருந்தோட்ட சிறார்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்கான 'டிகிரி சக்தி' போசணை பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ், தோட்டத்திலுள்ள 2-5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, பிஸ்கட்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பின்னகொட வித்தான, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X