2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்...

Thipaan   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

மூன்று அம்ச கோரிக்கையை  முன்வைத்து, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக  இன்று சனிக்கிழமை (09) நடைபெற்றது.

திருகோணமலை சம்பூர் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் வகையில் அமையவுள்ள அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும் சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65 ஆயிரம் இரும்புப் பொருத்து வீட்டுத்திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரியுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .