2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிரான்குளத்தில் சுழல் காற்று...

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - மண்முனைப்பற்ற பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று (26) மாலை வீசிய சுழல் காற்றுக் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் பொதுக் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. 

வீடுகள் மேல் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், சில வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன. அத்துடன், கிரான்குளம் பத்திரகாளியம்மன், மீன் விற்பனை நிலையம், மீனவர் சங்க கட்டடம் என்பனவும் சேதமடைந்துள்ளன.

கடந்த சில நாட்களாக நிவர் புயல் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த சுழல் காற்று வீசியுள்ளது.

(படங்கள் - வா.கிருஸ்ணா, வ.சக்தி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X