Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் கோட்டக்கல்வி பிரிவில் உள்ள தி/குளகோட்டன் வித்தியாலத்தின் முன்னால் தம்பலகாமம் குளக்கோட்டன் பாடசாலைக்கு முன்பாக குளக்கோட்ட மன்னனின் சிலையொன்று, இன்று (06) திறந்துவைக்கப்பட்டது.
திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் என் விஜேந்திரன், கோட்டக்கல்வி அதிகாரி செல்வநாதன், பாடசாலையின் அதிபர் ஜ. இளங்கேஸ்வரன் ஆகியோர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்துத் திறந்துவைத்தனர்.
மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளின் பயனாக பிரதேசத்தின் காணாமல ஆக்கப்பட்டோரின் நினைவின் பேரால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை, பொது மக்களின் பங்களிப்புடனும் ICRC மற்றும் தம்பலகாமம் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே. ஸ்ரீபதி, பிரதேச சபை செயலாளர் என். யாழினி, பாடசாலை சங்கத்தின் உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
(படம்: எம். எஸ். அப்துல் ஹலீம்)
16 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago