2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கேக் கண்காட்சி…

Editorial   / 2025 ஜூன் 17 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில

உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு சந்தையை இலக்காகக் கொண்டு, கேக், பேக்கரி மற்றும் பேஸ்ட்ரி உற்பத்தித் துறையில் NVQ-04 பாடநெறிகளைப் படிப்பதற்கான வசதிகளை வழங்கியுள்ள நீர்கொழும்பு "டீன்ஸ்" பேக்கரி மற்றும் கேக் உயர் கல்வியின் ஊடாக  இரண்டு நாள் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை (17) தொடங்கியது.

இந்த உயர்கல்வி நிறுவனத்தின் முதல்வர், சர்வதேச சமையல்காரர் விருது வென்ற பாத்திமா நிலூஃபா அமீர்தீன், இந்தக் கண்காட்சி இந்த நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் 06 வது கண்காட்சி என்று கூறினார்.

சர்வதேச சமையல்காரர் மற்றும் ஒலிம்பிக் விருது வென்ற   திமுத்து குமாரசிங்க அஸ்திரேலியாவிலிருந்து வந்து இந்தத் தொடக்க நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த உயர்கல்வி நிறுவனத்தில் பேக்கரி, கேக் மற்றும் பேஸ்ட்ரி உற்பத்திப் பாடநெறிகளைப் படிக்கும் 85 மாணவர்கள் இந்தக் கண்காட்சிக்காக தங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்திருந்தனர்.

இந்தக் கண்காட்சி நீர்கொழும்பில் உள்ள அவேந்திரா கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நாளையும் (18) நடைபெறும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .