2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறுத்தை மீட்பு....

Sudharshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், ரஞ்சித் ராஜபக்ஷ, ஆர்.ரமேஷ்

நுவரெலியா, டொப்பாஸ் காட்டுப் பகுதியில் பன்றிகளை பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்குண்டு சிறுத்தை ஒன்று இன்று(21) உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி சந்தன அபயவர்த்தன தெரிவித்தார்.

இச்சிறுத்தை 07 அடி 04 அங்குலம் நீளமுடையதெனவும் சுமார் 07 வயது மதிக்க தக்கதெனவும் அவர் தெரிவித்தார்.

சிறுத்தையின் உடலை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளான ஆரிய சிங்க, சந்தன அபயவர்த்தன, ஜி.ஆர் ரட்ணசிங்க, டபிள்யூ.எஸ்.திஸ்ஸ விஜயரடண ஆகியோர் இன்று (21)  நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய, சிறுத்தையின் உடலை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பயிற்சிக் கல்லூரிக்கு கொண்டுச் செல்வதற்கான அனுமதியை நீதவான் வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .