2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சஜித்துக்கு ஆதரவுக்குரல் வலுக்கிறது...

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நிறுத்துமாறு கோரி, மொனராகலை- வெல்லவாய நகரில், இன்று (26) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வெல்லவாய பிரதேச ஆதரவாளர்களின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு வலியுறுத்திய வாசகங்கள் அடங்கியப் பதாதைகளை ஏந்தியவாறு பேரணிச் சென்றதுடன், பின்னர் வெல்லவாய பஸ்தரிப்பிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊவா மாகாண சபையின் ஐ.தே.க உறுப்பினர் ரொய் காலிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பாரய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .