2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா!

Editorial   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன் 
 
கண்டி, வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பன்விலை கோட்டத்திலுள்ள அபிராமி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள், கடந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
 
இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் ஏழு பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர். இது பன்விலை கோட்டத்தில் மற்றுமொரு மைல்கல் சாதனையாகக் கருதப்படுகிறது. சித்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் வருமாறு:
 
S. டிலுசான் (160 புள்ளிகள்)
G. அபிலேஸ்வரி (149 புள்ளிகள்)
T. தக்சனா (149 புள்ளிகள்)
N. டிமேசன் (147 புள்ளிகள்)
V. தருவின் (147 புள்ளிகள்)
D. சிந்தனா (141 புள்ளிகள்)
Y. ரிசானி (131 புள்ளிகள்)
 
இந்தச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விசேட பாராட்டு விழா, பாடசாலை அதிபர் S. சிறிதரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகச் செலான் நிறுவனத்தின் பணிப்பாளர் தியாகராஜன் சத்தியசீலனும், சிறப்பு அதிதியாகப் பன்விலை மக்கள் வங்கியின் முகாமையாளர் M.G.W.M.C. விஜயகோனும் கலந்துகொண்டனர். விசேட அதிதியாக வத்தேகம கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஆலோசகர் திருமதி P. விஜேஸ்வரி கலந்துகொண்டு சிறப்பித்தார்.
 
மாணவர்களின் இந்த வெற்றிக்கு வழிகாட்டிய வகுப்பாசிரியை திருமதி மு. திலகநதி, பாடசாலை சமூகத்தினரால் விசேடமாகக் கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .