Editorial / 2026 மார்ச் 11 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து நடத்திய மாகாண மட்ட இப்தார் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் நந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனிபா மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இவ்விழாவில், சமயப் பெரியார்களுக்கு கௌரவப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.










16 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago