2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சமாதானக் கல்விப்பிரிவின் தைப்பொங்கல் விழா…

Editorial   / 2018 ஜனவரி 28 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலகத்தின்  சமாதானக் கல்விப்பிரிவினால்  தைப்பொங்கல் விழா நேற்று (27) நடாத்தப்பட்டது.

சமய மற்றும் கலாசார விழாக்களை ஒன்றிணைந்து கொண்டாடும் வேலைத்திட்டத்தின்கீழ், செங்கலடி- விவேகானந்த வித்தியாயல வளாகத்தில், கல்வி வலயத்தின் சமாதானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.ஏ நாஸர் தலைமையில் சர்வ சமயப் பெரியார்களது ஆசியுரையுடன் இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்- முனீறா பாலிகா மகா வித்தியாயலம், பதியுதீன் மஹ்மூத் வித்தியாயலம் மற்றும் கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரி, விவேகானந்தா வித்தியாயலம், ஒரு முழச்சோலை சித்தி விநாயகர் வித்தியாயலம் ஆகிய பாடசாலைகளின் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்களது கலை கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

இவ்விழாவின் அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் றிஸ்மியா பாணு, சமூக சேவகர் என். மோகன ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள் - பேரின்பராஜா சபேஷ்)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .