2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்,எஸ்.கணேசன்

 

சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணக்கூப்பன் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கினிகத்தேனை பிரதேசத்துக்கு உட்பட்ட மக்கள், அம்பகமுவ பிரதேச செயலக வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தில், இன்றுக் காலை ஈடுபட்டனர்.

தமக்கு வழங்கப்பட வேண்டிய சமுர்த்தி கூப்பன் வழங்கப்படாதுள்ளதடன் அக்கூப்பன்   மற்றவர்களுக்கு வழங்கப்படமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நோட்டறௌ விதுலிபுர, கினிகத்தேன, நோர்வூட்,  ஹட்டன், பொல்பிட்டிய ஆகிய கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்,  சமுர்த்தி நிவாரணக்கூப்பன் பெயர் நீக்கப்பட்டவர்களே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2015ஆம் ஆண்டு சமுர்த்தி  அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின் சமுர்த்தி பயனாளிகளின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டது. குறித்த பெயர்பட்டியலில் இதுவரை காலமும் சமுர்த்தி நிவாரணக்கூப்பன் பெற்றுவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டடோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய பயனாளின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் வரை ஈடுபட்டதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்திலிருந்து கினிகத்தேன நகர்வரை கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணியால் கண்டி, கொழும்பு, ஹட்டன் மார்க்கங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கினிகத்தேனை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X