2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சர்வதேச யோகா தினம்

R.Tharaniya   / 2025 ஜூன் 22 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு சனிக்கிழமை (21) அன்று ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா,

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், இந்திய தூதரக உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .