2025 ஜூலை 26, சனிக்கிழமை

சிரமதானம்…

Editorial   / 2017 ஜூலை 29 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில், கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் பாடசாலை சூழல்,வெளிச்சூழல் போன்றவற்றில் பாரிய டெங்கு சிரமதானம், இன்று (28) நடைபெற்றது. 

"பாடசாலையில் முற்றாக டெங்கை ஒழித்து ஆரோக்கியமான சுகாதார வாழ்வுக்கு வித்திடுவோம்" என்பதற்கு இணங்க, 11 விடயங்களில் இந்த டெங்கு சிரமதானம் நடைபெற்றது.

பாடசாலையில் பயன்பாட்டில் இல்லாத மலசல கூடத்தொகுதிகளை அகற்றுதல், உடைந்த பொருட்களை பொருத்தமானவாறு முகாமை செய்தல்,கொங்கிறீட் கூரையில் நீர் தேங்கி நிற்காதவாறு முகாமை செய்தல், மலசல கூடங்களுக்கு அண்மையில் உள்ள நுளம்பு பெருகும் இடங்களைத் துப்பரவு செய்தல், கூரைகளை சுத்திகரித்தல், வீதி வடிகான்களை துப்பரவு செய்தல், மரஞ்செடிகளை துப்பரவு செய்தல், குப்பைத்தொட்டிகளில் முகாமைத்துவம் மேற்கொள்ளல் ஆகியன நடைபெற்றன.

அதிபர், பிரதி அதிபர்களின் வழிகாட்டல்களிலும் ஆலோசனையின் பேரிலும் நடைபெற்ற இச்சிரமதானத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 1,000 பேர் கலந்துகொண்டார்கள்.

(படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X