R.Tharaniya / 2025 நவம்பர் 05 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி புதன்கிழமை (05) அன்று காலை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது .
காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணி வகுக்கப்பட்ட அங்கு உரியவர்கள் அறிவுறுத்தப்பட்டு வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வட இந்து மகளிர் கல்லூரியில் வகுப்பு வகுப்பாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டதுடன் கிராம மக்களும் தங்கவைக்கப்பட்டனர். பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழுவினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாணவர்கள் கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இதேவேளை ஒத்திகையின் போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள் மாணவர்கள் ஒரு சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை பொலிஸார் ஆகியோர் ஏற்றி வந்த வட இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர்.
இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை பொலிஸார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூ மெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புகள் திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன.
இச் சுனாமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500 வரையான வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவர்கள் சுமார் 500 க்கு மேற்பட்டோரும் பொதுமக்கள் சுமார் 250 பேர் வரையும் கலந்துகொண்டிருந்தனர்.குறித்த ஒத்திகை நிகழ்வு வருடாந்த இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.





எஸ் தில்லை நாதன்
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago