2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சுபநேரச் சீட்டு...

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறக்கவுள்ள சித்திரைப் புத்தாண்டுக்கான சுபநேரக் குறிப்படங்கிய சீட்டு, சம்பிரதாயபூர்வமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று (04) முற்பகல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன, உரிய சம்பிரதாய நடவடிக்கைகளின் பின்னர், ஜனாதிபதியிடம், மேற்படி சுபநேரச் ​சீட்டைக் கையளித்தார்.

சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு, புண்ணிய காலம், உணவு தயாரித்தல், உணவு உட்கொள்ளல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல் மற்றும் சுப நேரத்தில் வேலைக்குச் செல்லல் போன்றவற்றுக்கான சுபநேரங்கள், இந்த அட்​டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .